பக்கங்கள்

பக்கங்கள்

22 டிச., 2013

தென் சூடான் செல்பவர்களுக்கு எச்சரிக்கை
தொழில் வாய்ப்புகளுக்காக தென் சூடானுக்கு செல்வது தொடர்பில் விழிப்புணர்வுடன் செயற்படுமாறு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் கேட்டுள்ளது.


தென் சூடான் ஜனாதிபதியை பதவியிலிருந்து அகற்றும் நோக்கில் தற்போது தாக்குதல்கள்  ஆரம்பமாகியுள்ளது. அதன்படி கடந்த நாட்களில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவங்களில் சுமார் 500 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் இந்த மோதல்கள் காரணமாக இலங்கையர்களுக்கு பாதிப்புகள் ஏற்படக் கூடும் என பணியகம் தெரிவித்துள்ளது.

எனினும் தென் சூடானில் நூறுக்கு முற்பட்ட இலங்கையர்கள் பணி புரிந்து வருகின்றனர். இருப்பினும் தேவையேற்பட்டால் இவர்களை திருப்பி அழைப்பது குறித்தும் கவனம் செலுத்தப்படும்.

எனவே தொழில் வாய்ப்பை பெற்றுச் செல்வோர் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஆலோசனைகளை பெறவேண்டும் எனவும்  அறிவுறுத்தப்பட்டுள்ளதாக பணியகத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.