பக்கங்கள்

பக்கங்கள்

23 டிச., 2013

தேவயானி மீதான வழக்கை திரும்பப் பெறுமாறு ஒபாமாவுக்கு அமெரிக்க வாழ் இந்தியர்கள் வேண்டுகோள்
இந்திய துணைத் தூதர் தேவயானி மீதான வழக்கை திரும்பப் பெறுமாறு அதிபர் ஒபாமாவுக்கு அமெரிக்க வாழ் இந்தியர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதுதொடர்பாக வெள்ளை மாளிகை
இணையதளத்தில் கோரிக்கை வைத்துள்ள இந்தியர்கள்,

தேவயானி மீதான கைது நடவடிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்தியாவின் பிரதிநிதியான தேவயானியிடம் அதிகாரிகள் நடந்து கொண்ட விதம், அமெரிக்கா விரோதப்போக்கில் செயல்படுவதையே காட்டுகிறது. 
பொது இடத்தில் வைத்து இந்திய துணைத்தூதரை கைது செய்தது, அமெரிக்க வாழ் இந்தியர்களின் உணர்வுகளை காயப்படுத்தியுள்ளது. இந்த நடவடிக்கை இரு நாட்டு உறவில் சிக்கலை ஏற்படுத்தும். எனவே தேவயானி மீதான வழக்குகளை உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என கூறியுள்ளனர். 
இதேபோன்று தேவயானி மீதான கைது நடவடிக்கையை அமெரிக்காவைச் சேர்ந்த அரசியல் வல்லுநர்களும் விமர்சித்துள்ளனர்