பக்கங்கள்

பக்கங்கள்

12 டிச., 2013

காதலியின் தாயிடம் அடிவாங்கிய பொலிஸ் உத்தியோகத்தர்: யாழில் சம்பவம்
யாழ். பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் காதல் விவகாரம் காரணமாக அடிவாங்கிய சம்பவமொன்று இன்று இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணம் மாம்பழம் சந்தி பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவருடன் யாழ்.பொலிஸ் நிலையத்தில் கடமை புரியும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பழகி வந்துள்ளார்.
இவர்கள் இருவரின் தொடர்பு குறித்த பெண்ணின் வீட்டிற்கு தெரியவந்ததையடுத்து, குறித்த பெண்ணின் தாயார் பொலிஸ் உத்தியோகத்தரிடம் தனது மகளை போன்று பேசி வீட்டிற்கு அழைத்துள்ளார்.
தன்னுடன் பழகும் பெண் அழைத்தாக நம்பிய பொலிஸ் உத்தியோகத்தர், பெண்ணின் வீட்டிற்கு சென்றுள்ளார்.
இதன்போது, அங்கிருந்த குறித்த பெண்ணின் சகோதரன் மற்றும் தாயார் இணைந்து பொலிஸ் உத்தியோகத்தரை தாக்கியுள்ளனர்.
இந்த தாக்குதலிலிருந்து குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் தப்பியோடி யாழ். பொலிஸ் நிலையத்தில் தஞ்சமடைந்துள்ளதாக தெரியவருகிறது.