பக்கங்கள்

பக்கங்கள்

23 டிச., 2013

அரவிந்த் கெஜ்ரிவால் மதுரையில் பிறந்தாரா?
 : புதிய சர்ச்சை

 

ஆம் ஆத்மியின் கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால். இவர் நியூ டெல்லியில் வசிக்கிறார்.  டெல்லியில் பிறந்த கெஜ்ரிவால், மதுரையில் பிறந்ததாக மதுரை மாநகராட்சி பிறப்பு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.


இதனால் அவர் மதுரையில் பிறந்தாரா? டெல்லியில் பிறந்தாரா? என்ற புதிய சர்ச்சை எழுந்துள்ளது.


மதுரையில் கடந்த 20.5. 2013ல்  டெல்லியில் பிறந்த ஆம் ஆத்மி கட்சி தலைவர், மதுரை புதூரில் பிறந்ததாக மதுரை மாநகராட்சி ஒரு பிறப்புச்சான்றிதழ் வழங்கியுள்ளது.

27.12.1970ல் கெஜ்ரிவால் பிறந்ததாக, அவருடைய தந்தை பெயர் ராம்ஜிராவ் கெய்வாக்ட்.  தாயார் பெயர் கீதாதேவி என்றும்,   நிலையான வீட்டுமுகவரி நியூடெல்லி.   குழந்தை பிறப்பின்போது பெற்றோரின் முகவரி எண்: 27, கற்பகம் நகர், மதுரை -7.  என்று சான்றிதழில் உள்ளது.
இதனால் மதுரையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.