பக்கங்கள்

பக்கங்கள்

21 டிச., 2013

பாகிஸ்தானை வீழ்த்தி இலங்கை அணி வெற்றி

பாகிஸ்தானுக்கு எதிராக இடம்பெற்ற இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி இரண்டு விக்கெட்டுக்களால் வெற்றியீட்டியுள்ளது.
துபாயில் நேற்று இடம்பெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்புடன் களமிறங்கிய பாகிஸ்தான் சார்பில் அஹமட் சிகாட் அதிரடியாக ஆடி 124 ஓட்டங்களை குவித்தார்.
மேலும் மிஸ்பா உல் ஹக் 59 ஓட்டங்களையும், ஷகீட் அபரிடி 30 ஓட்டங்களையும் ஆட்டமிழக்கமால் பெற்றனர்.
50 ஓவர்கள் நிறைவில் நான்கு விக்கெட்டுக்களை மட்டுமே இழந்த பாகிஸ்தான் அணி 284 ஓட்டங்களை குவித்தது.
இதன்படி 285 என்ற கடினமான இலக்கை நோக்கி, பதிலுக்குத் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய இலங்கை அணி சார்பில் குமார் சங்கக்கார 58 ஓட்டங்களையும், ஏஞ்சலோ மெத்தியூஸ் 47 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.
முடிவில் 49.4 ஓவர்களில் எட்டு விக்கெட்டுக்களை இழந்த நிலையில் 287 ஓட்டங்களை விளாசி இலங்கை வெற்றியீட்டியது.
போட்டியின் சிறப்பாட்டக்காரராக ஏஞ்சலோ மெத்தியூஸ் தெரிவு செய்யப்பட்டார்.
ஐந்து போட்டிகளைக் கொண்ட ஒரு நாள் தொடரில், முதலாவது போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்ற நிலையில், தொடர் 1-1 என சமப்படுத்தப்பட்டுள்ளது.