பக்கங்கள்

பக்கங்கள்

16 டிச., 2013

தாய் மற்றும் இரு பிள்ளைகள் சடலமாக மீட்பு

மாத்தறை- கந்தர பிரதேசத்தில் உள்ள வீடொன்றிலிருந்து தாய் மற்றும் அவரது இரு பிள்ளைகளின் சடலங்களை பொலிஸார் மீட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
 
பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவல் ஒன்றின் அடிப்படையிலேயே இந்த சடலங்கள் இன்று மாலை மீட்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.
 
29 வயதான தாயும் அவரது 9 வயதான மகள் மற்றும் 7 வயதான மகன் ஆகியோரே இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். இது தற்கொலையாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ள போதிலும் அதனை உறுதியாக கூற முடியாது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன குறிப்பிட்டார்.
 
சடலங்கள் பிரேத பரிசோதனைகளுக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் சம்பவம் தொடர்பில் பொலிஸார் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags: