பக்கங்கள்

பக்கங்கள்

22 டிச., 2013

கனடாவின் கிழக்கு பகுதிகளில் இந்த வார இறுதி நாட்களில் அதிகளவு பனிப்பொழிவு இருக்கும் என காலநிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது.
நேற்று முதன் பனிக்காலம் ஆரம்பித்து விட்டதால், பனிப்பொழிவு வழமையை விட அதிகளவு உள்ளது.இந்நிலையில் கனடாவின் கிழக்கு பகுதிகளில் வார இறுதி நாட்களில் இல்லாத அளவு அதிகளவு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுஒரு பனிப்புயலாகவே காட்சியளிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது, ஒன்றாரியோவின் வடபகுதியில் இருந்து தொடங்கி, பிறின்ஸ் எட்வேட் தீவு வரையில் காலநிலை சம்பந்தமான எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் உறைபனியின் காரணமாக வீதிகளில் வாகனம் செலுத்துவது ஆபத்தான ஒன்று என்றும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
எனவே வீதிகளில் பயணம் செய்யும் போது அதிகளவு கவனத்துடன் செல்லும்படி பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளனர்.