பக்கங்கள்

பக்கங்கள்

31 ஜன., 2014

உலகப் புற்று நோய் தினம்

இணையத்தளம் அங்குரார்ப்பணம்

உலக புற்று நோய் தினம் பெப்ரவரி 04 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ளது. இவ்வருடத் திற்கான தொனிப்பொருள், மாயத்திரையை அகற்றி உண்மையைப் பாருங்கள்’ என்பதாகும். இதற்கமைவாக இலங்கை மக்களுக்கு புற்றுநோய்
தொடர்பிலான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன www.nccp.gov.lk என்னும் இணையதளத்தை நேற்று அங்குரார்ப்பணம் செய்து வைத்தார்.
இதனுடன் இணைந்ததாக 0715320320 என்ற அவசர தொலைபேசி இலக்கமும் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. குறித்த தொலைபேசி இலக்கத்தினூடாக காலை 8.30 மணி முதல் மாலை 4.30 மணி வரையில் எமது உள்ளூர் வைத்தியர்களிடமிருந்து புற்றுநோய்க்கான அறிகுறிகள், சிகிச்சை முறை என்பன குறித்து பொதுமக்கள் தமது சந்தேகங்களை தீர்த்துக்கொள்ள முடியுமெனவும் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன இதன்போது கூறினார்.