பக்கங்கள்

பக்கங்கள்

6 ஜன., 2014

சுவிஸ் கிட்டு நினைவு சுற்றுப்போட்டியில் கிட்டு கிண்ணத்தை லீஸ் யங்  ஸ்டார் கழகம்  தனதாக்கி கொண்டது 

சுவிஸ் சுக் மாநிலத்தில் உள்ள ரோட்குரோஷ் டோர்ப்மாட் உள்ளரங்க மைதானத்தில் 04 ஜனவரி நடைபெற்ற கிட்டு  ஞாபகார்த்த உதைபந்தாட்டச் சுற்றுப்போடியில் லீஸ் யங் ஸ்டார் கழகம் பெருமை மிகு கிட்டு கிண்ணத்தை  வென்று சாதனைபடைத்துள்ளது .இறுதியாட்டத்தில் பேர்ன்  றோயல்  அணியுடன் மோதி 2-0 என்ற ரீதியில்  வென்றுள்ள இக்கழகத்தின் வீரரான  நிஷத் சதானந்தன் சிறந்த வீரரராக  தெரிவாகினர் .கலை  8.15 க்கு கிட்டு உருவப்படத்துக்கு மலரஞ்சலி செய்த நிகழ்வோடுநிகழ்ச்சி நிரலின் படி சரியாக 8.30 க்கு போட்டிகள் ஆரம்பமாகின ,மிகவும் சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்டிருந்த இந்த சுற்றுப்போடிகளில் 1.ஆம் இடத்தை யங்  ஸ்டார் கழகமும் 2-ஆம் இடத்தை றோயல்  கழகமும் 3 ஆம் இடத்தை சுவிஸ் போய்ஸ் கழகமும் கைப்பற்றின .யங்  ஸ்டார் கழகம் எந்த போட்டியிலும் தோல்வியுறாது  இறுதியாட்டம் வரை  நுழைந்திருந்தது