பக்கங்கள்

பக்கங்கள்

26 ஜன., 2014

கட்டுநாயக்கவில் இனந்தெரியாதோர் துப்பாக்கி சூடு! தமிழர் ஒருவர் பலி
கட்டுநாயக்க பகுதியில் இன்று காலை 10.30 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் தமிழர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
நீர்கொழும்பு பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய புண்ணியதரன் என்ற நபரே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போதே இனந்தெரியாத நபர்களின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொலைச் சம்பவம் ஒன்றின் சந்தேகநபரான இவர், குறித்த வழக்கு தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் கையொப்பமிட்டு திரும்பும் போது துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளார்.
இச்சூட்டுச் சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்