பக்கங்கள்

பக்கங்கள்

15 ஜன., 2014

சுவிஸ் தலைநகரில் செந்தமிழ் வழிபாட்டுத் திருக்கோவில் ஞானலிங்கேச்சுரத்தில் தைப்பொங்கல் 


தமிழர் திருநாளாம் தைத்திருநாளில் சுவிஸ் நாட்டின் தலைநகர் பேர்ண் மாநிலத்தில் இன்று (14. 01. 2014) அருள்ஞானமிகு ஞானாம்பிகை உடனாய ஞானலிங்கப்பெருமான் எழுந்தருளி அருளாட்சிபுரியும் ஞானலிங்கேச்சுரத்தில் தைப்பொங்கல் வெகு சிறப்பாக முற்றத்தில் கோலமிட்டு, மண்பானையில் தாயத்து முறையில் பகலவன் கதிரவனிற்கு சிறப்பு பொங்கலிட்டு நடைபெற்றது. இப்பெருநாளில் பல்சமயஇல்லத்தின் தலைவர். திரு. காட்முற் ஹாஸ் அவர்கள் அதிதயாகக் கலந்துகொண்டார். ஞானலிங்கேச்சுரர் திருக்கோவில் சுவிஸ் நாட்டின் தலைநகரில் இராச கோபுரத்துடன் திருப்பணி கண்டுவருவதுடன், கருவறையில் தமிழ் வழிபாடு நடைபெறும் திருக்கோவில் என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும். அடியவர்கள் கருவறை வரை சென்று தாமே வழிபாடு செய்ய ஊக்குவிக்கும் திருக்கோவில் ஞானலிங்கேச்சுரம் என்பதும் குறிப்பிடத்தக்கது.