பக்கங்கள்

பக்கங்கள்

25 ஜன., 2014

கொத்மலை ரம்பொட தோட்டத்தில் தீ பரவல்! 149 குடும்பங்கள் இடம்பெயர்வு
நுவரெலியா - கொத்மலை, ரம்பொட தோட்டத்தில் இரண்டு லயன் அறைகளில் இன்று மதியம் ஏற்பட்ட தீப் பரவலில் 29 வீடுகள் தீயில் அழிந்துள்ளன.இந்த தீ பரவல் காரணமாக லயன் வீடுகளில் வசித்து வந்த 149 தொழிலாளர்களின் குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளதாக நுவரெலியா மாவட்ட இடர்முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
இடம்பெயர்ந்துள்ள மக்களை பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் இடர் முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது.
மின் ஒழுக்கு காரணமாக தீ பரவியிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.