பக்கங்கள்

பக்கங்கள்

29 ஜன., 2014

கால்பந்தாட்ட வீரரின் விருதை கெடுத்த ‘முத்தம்’

2013ம் ஆண்டிற்கான சிறந்த கால்பந்து வீரர் என்ற விருதினை எகிப்திய வீரர் முகமது சாலாவுக்கு சுவிஸ் சூப்பர் அணி வழங்கி கௌரவித்துள்ளது.சுவிட்சர்லாந்து நாட்டில் 2013ம் ஆண்டிற்கான விளையாட்டு விருது வழங்கும் விழா நடைபெற்றது.

இதில் எகிப்திய வீரர் முகமது சாலா(21) என்பவருக்கு சிறந்த கால்பந்து வீரருக்கான விருது வழங்கப்பட்டது.
இவர் விருதை பெற்றுக்கொள்ளும்போது நிகழ்ச்சி தொகுப்பாளினி ஒருவர் இவரது கன்னத்தில் முத்தமிட்டுள்ளார்.
சுவிஸ் நாட்டு வழக்கப்படி கன்னத்தில் அன்பு முத்தங்களை ஆணும், பெண்ணும் பரிமாறிக்கொள்வதில் எந்தவித தவறும் இல்லை.
ஆனால் எகிப்திலும், அரபு நாடுகளிலும் இந்த சம்பவமானது கடுமையாக விமர்சிக்கப்பட்டு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து முகமது சாலா கூறுகையில், 2013ம் ஆண்டிற்கான விருதை மறந்துவிட்டு பெண் தொகுப்பாளர் கன்னத்தில் முத்தம் கொடுத்ததை மட்டுமே கவனத்தில் கொண்டுள்ளனர் என்றும் அவர்களது கடுமையான விமர்சனம் என் சந்தோஷத்தை இழக்கச் செய்கிறது எனவும் கூறியுள்ளார்.
மேலும் சுவிஸ் நாட்டில் நான் எங்கு சென்றாலும் என்னை காண்கின்ற மக்கள் கைதட்டி ஆரவாரத்துடன் வரவேற்கின்றனர், ஆனால் என் நாட்டு மக்களோ என்னை கடுமையாக விமர்சித்துள்ளனர் என்று வருத்தத்தை தெரிவித்துள்ளார்.
முகமது சாலா 2012ம் ஆண்டிலிருந்து சுவிஸ் எப் சீ பாசல் கழக  கால்பந்தாட்ட அணியில் பங்கேற்று இதுவரை 10 கோல்கள் போட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.ஐரோப்பிய சம்பியன்  லீக் போட்டியில் பலம் மிக்க செல்சீ அனிகெதிராகமட்டும் 3 கோல்களை அடித்து சாதனை படைத்துள்ளார் 
English Version