பக்கங்கள்

பக்கங்கள்

30 ஜன., 2014

பாராசூட் விரியாததால் பைலட் பயிற்சி மாணவி சேலம் ஏர்போர்ட்டில் விழுந்து உயிரிழப்பு
பெங்களூருவைச் சேர்ந்தவர் ரம்யா (26). இவரது கணவர் வினோத் (28). இவர்கள் உட்பட 10 பேர் கொண்ட குழுவினர், இந்தியா ஸ்கைடைலிங் பாராசூட் அசோசேஷியன் என்ற அமைப்பின்
மூலமாக விமான ஓட்டும் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

வியாழக்கிழமை மதியம் ஒரு மணி அளவில், ஒரு கிளைடர் பயிற்சி விமானத்தின் மூலம் சேலம் வந்த இவர்கள், காமலாபுரம் விமான தளத்தில் விமானத்தில் இருந்து பாராசூட் மூலம் கீழே குதித்துள்ளனர். 
இதில் ரம்யாவின் பாராசூட் மட்டும் குறிப்பிட்ட நேரத்தில் விரியாமல் போனதால் சுமார் இரண்டாயிரம் அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த ரம்யா பரிதாபமாக உயிரிழந்தார். 
இந்த சம்பவம் குறித்து தீவட்டிபட்டி காவல்நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.