பக்கங்கள்

பக்கங்கள்

28 ஜன., 2014


 
அந்தமான் படகு விபத்து: உயிரிழந்தோரின் உடல்கள் சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு அனுப்பப்பட்டன
அந்தமான் அருகே நடுக்கடலில் ஞாயிற்றுக்கிழமை மாலை நிகழ்ந்த படகு விபத்தில் 28 பேர் உயிரிழந்த நிலையில் 16 பேரின் உடல்கள் விமானம் மூலம் சென்னைக்கு திங்கள்கிழமை கொண்டுவரப்பட்டன.
பின்னர் 16 பேரின் உடல்களும் ஆம்புலன்ஸ் மூலம் சொந்த ஊர்களுக்கு கொண்டு செல்லப்பட்டு அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த விபத்தில் காயம் அடைந்தவர்களும் விமானம் மூலம் சென்னைக்கு அழைத்து வரப்பட்டனர். இவர்கள் தனிப் பேருந்தில் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 
இந்த படகில் பயணித்தவர்களில் சென்னை, காஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்த 33 பேர் பயணம் செய்துள்ளனர். பல்வேறு இடங்களை சுற்றிப் பார்த்துவிட்டு படகு பயணம் மேற்கொண்டுள்ளனர். அளவுக்கு அதிகமாக பயணிகளை ஏற்றியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் நீரில் மூழ்கி 28 பேர் உயிரிழந்தனர். படகில் உயிர்காக்கும் சாதனங்கள் இல்லாதததும், உயிரிழப்பு அதிகரிக்க காரணம் என்று முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. 

விபத்து தொடர்பாக அந்த படகின் உரிமையாளர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.