பக்கங்கள்

பக்கங்கள்

18 ஜன., 2014

இலங்கைப் பெண்ணிடம் சில்மிஷம்: மருத்துவர் உட்பட 6 பேர் கைது
இலங்கை அகதி முகாமைச் சேர்ந்த பெண்ணொருவரிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட மருத்துவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.தமிழ்நாடு, விருதுநகர் அருகே உள்ள கூரைக்குண்டு பகுதியை சேர்ந்த சித்தா மருத்துவர் செல்வராஜ் (வயது 42), என்பவரின் கிளினிக்கில், குல்லூர் சந்தையில் உள்
ள இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த புஷ்பலதா (24) என்ற பெண் வேலைபார்த்து வந்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அவர் வேலைக்கு செல்லவில்லை. இதனை தொடர்ந்து புஷ்பலதாவின் கைத் தொலைபேசிக்கு மருத்துவர் செல்வராஜ் தொடர்பு கொண்டுள்ளார். அப்போது அவருக்கும், புஷ்பலதாவின் அண்ணன் செல்வகுமாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் மருத்துவர் செல்வராஜ், அவரது மனைவி கனகலட்சுமி உட்பட உறவினர்கள் 6 பேருடன் காரில் வந்து கொலைமிரட்டல் விடுத்ததாக செல்வகுமார் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
மேலும் புஷ்பலதாவிடம், மருத்துவர் செல்வராஜ் சில்மிஷம் செய்ததால்தான் வேலைக்கு செல்லவில்லை என்றும், இதனை கண்டித்ததாலேயே கொலைமிரட்டல் விடுக்கப்பட்டதாகவும் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சூளக்கரை பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதன் அடிப்படையில் மருத்துவர் செல்வராஜ் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். காரும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மருத்துவரின் கனகலட்சுமியை பொலிஸார் தேடி வருகின்றனர்.