பக்கங்கள்

பக்கங்கள்

8 ஜன., 2014

பிப்ரவரி 8-ல் சென்னை வருகிறார் நரேந்திர மோடி
குஜராத் முதல்வரும், பாஜக பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி வரும் பிப்ரவரி 8-ஆம் தேதி சென்னை வருகிறார். சென்னை புறநகர் பகுதியில் நடைபெறும் பாஜக தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் அவர் பங்கேற்க இருப்பதாக தமிழக பாஜக
தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.


இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  ‘’பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி வரும் பிப்ரவரி 8-ஆம் தேதி சென்னை வருகிறார். புறநகர் பகுதியில் பிரம்மாண்ட தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அவர் பேசுகிறார். இதற்கான இடம் ஓரிரு நாளில் அறிவிக்கப்படும்’’என்று தெரிவித்தார்.