பக்கங்கள்

பக்கங்கள்

23 ஜன., 2014

சென்னை விமான நிலையத்தில் துபாயில் இருந்து கடத்தி வந்த 8 துப்பாக்கிகள் பறிமுதல்
சென்னை மீனம்பாக்கம் அண்ணா பன்னாட்டு விமான நிலையத்திற்கு புதன்கிழமை துபாயில் இருந்து ஒரு விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள்
கண்காணித்தனர். அப்போது கோவையை சேர்ந்த ரெஜிகுரியன் (40) என்பவரின் சூட்கேசை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அதன் உள்ளே துணிகளுக்கு இடையே, 0.22 எம்.எம். அளவு 8 கைத்துப்பாக்கிகள் மறைத்து வைக்கப்பட்டு இருந்தன. உடனே ரெஜிகுரியனை தனியறைக்கு அழைத்து சென்று விசாரித்தனர். 
அதில் அவர், துபாயில் உள்ள தனியார் வங்கியின் ஊழியர் என்பதும் கேரளாவை சேர்ந்த அவர் கோவையில் தங்கி இருப்பதும் தெரியவந்தது.
வெளிநாடுகளில் இருந்து 0.17 எம்.எம். அளவு கைத்துப்பாக்கி ஒன்று மட்டும், முறையான அனுமதி பெற்று, விமானியிடம் ஒப்படைத்து கொண்டு வரவேண்டும் என்பது விதிமுறையாகும். 0.22 எம்.எம். அளவு கைத்துப்பாக்கி கொண்டு வர அனுமதி கிடையாது. 
ரெஜிகுரியன் துப்பாக்கிகளை கடத்தி வந்து உள்ளது ஏன்? யாருக்காக கடத்தி வரப்பட்டது? இதற்கு முன்பும் துப்பாக்கி கடத்தி வந்தாரா? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடக்கிறது.
அவரிடம் மத்திய உளவுதுறையினர் சுமார் 10 மணி நேரம் தீவிர விசாரணை நடத்தினர். ரெஜிகுரியனை விமான நிலைய போலீசார் கைது செய்தனர். 
பரங்கிமலை போலீஸ் துணை ஆணையாளர் சரவணன் மற்றும் மீனம்பாக்கம் உதவி ஆணையாளர் விஜயகுமார் ஆகியோர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.