பக்கங்கள்

பக்கங்கள்

26 ஜன., 2014

முகாம்களில் வசிக்காத இலங்கைத் தமிழர்களுக்கும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
தமிழக மக்களின் நலனுக்காக செயல்படுத்தப்படும் அனைத்து நலவாழ்வுத்  திட்டங்களும், தமிழக முகாம்களில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கும்  விரிவுப்படுத்தியுள்ளார் தமிழக முதல்வர் ஜெயலலிதா.  அதன்படி அரசு நலத் திட்டங்கள் அனைத்தும் இலங்கைத்
தமிழர்களுக்கும்  செயல்படுத்தப்பட்டு வருகிறது.  அந்த வகையில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத்  திட்டமும்  முகாம்களில் வாழும் இலங்கை தமிழர்களுக்கும் விரிவுப்படுத்தப்பட்டது.
 தமிழகத்தில் வாழும் அனைத்து  இலங்கைத் தமிழர்களும் பயன்பெறும் வகையில், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தினை,  முகாம்களில் வசிக்காது, உள்ளூர் காவல் நிலையங்களில் அகதிகளாக பதிவு செய்துள்ள இலங்கைத் தமிழர்களுக்கும் விரிவுப்படுத்திட  ஜெயலலிதா  உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் 13,289 குடும்பங்களைச் சார்ந்த 34,826 இலங்கைத் தமிழர்கள் பயன் அடைவார்கள்.