பக்கங்கள்

பக்கங்கள்

24 ஜன., 2014


திமுகவில் இருந்து நீக்கப்பட்டார் மு.க.அழகிரி
 

கட்சி கட்டுப்பாட்டை மீறியதால், மு.க.அழகிரி மீது திமுக தலைமைக்கழகம் ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளது. திமுக உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் மு.க.அழகிரி நீக்கம் என்று அறிவித்துள்ளது.  திமுகவின்
பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.


மேலும்,  இது கட்சியின் ஒற்றுமைக்காக எடுக்கப்பட்ட முடிவு.   திமுகவினர் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என்றும் அறிவித்துள்ளார்  பேராசிரியர்.
அழகிரியின் பிறந்த நாளை முன்னிட்டு, கடந்த ஒருமாதத்திற்கு முன்னமே மதுரையில் வாழ்த்து போஸ்டர்கள் ஒட்ட ஆரம்பித்தனர் ஆதரவாளர்கள்.  இதுவே, அழகிரியை கட்சியை விட்டு நீக்கும் அளவிற்கு பிரச்சனையாக அமைந்துவிட்டது. வாழ்த்து போஸ்டரில் இருந்தவை திமுக தலைமையை அதிருப்திய டையச்செய்தது.  ஆகவே,  அதற்கு காரணமான அழகிரி ஆதரவாளர்களை அதிரடியாக கட்சியில் இருந்து நீக்கியது திமுக தலைமை.     இந்த பரபரப்பு அடங்குவதற்குள் மதுரை மாநருக்கு புதிய பொறுப்பாளர் களையும் அறிவித்தார் கலைஞர்.
இந்நிலையில் நேற்று  மீண்டும் 5 அழகிரி ஆதரவாளர்களை நீக்கி உத்தரவிட்டது திமுக தலைமை.   இதையடுத்து இன்று காலை திமுக தலைவர் கலைஞரை சந்தித்து பேசினார் அழகிரி.   இந்த சந்திப்பில் கடுமையான விவாதம் நடந்ததாக கூறப்படுகிறது. 
கலைஞர் - அழகிரி சந்திப்பு நடந்த சில மணி நேரம் கழித்து,  அழகிரியை திமுகவில் இருந்து நீக்கம் செய்து அதிரடி அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.