பக்கங்கள்

பக்கங்கள்

27 ஜன., 2014

கனடா-மருத்துவ சேவை விவகாரங்களில் அகதிகளிடம் பாரபட்சம் காட்டும் ஹார்ப்பர் அரசின் கொள்கைகள் ஏற்புடையதல்ல – கடுமையாகச் சாடுகிறார் காத்லீன் வெய்ன்

kathleen wynne
நாட்டில் உள்ள அகதி மக்களில் சிலருக்கு மட்டும் மருத்துவ சேவைகள் அளிக்காமல் இருப்பது, ஒட்டாவா அரசாங்கத்தின் ‘பொறுப்பற்ற’ செயல் என்று  ஒன்டாரியோ மாகாண பிரீமியர் வெய்ன் கடுமையாக விமர்சித்துள்ளார். மத்திய அரசு அத்தகைய சேவைகளை அகதிகளுக்கு அளிக்க முன்வராத காரணத்தால்,
ஒன்ரோறியோ மாகாணம் இத்திட்டத்தைப் பொறுப்பேற்று நடத்த வேண்டிய சூழ்நிலையில் உள்ளது  என்பதையும் தன்னுடைய விமர்சனத்தின் போது சுட்டிக் காட்டினார்.
18 மாதங்களுக்கு முன்பு அகதி மக்கள் பலருக்கு மத்திய அரசால்  மருத்துவ சேவைகள் அளிக்கப்டாத  நிலை இருந்த போது ஒன்ரோறியோ மாகாணம் சார்பில் மருத்துவ சேவைத் திட்டம் அறிமுகப்படுத்தியதையும் , தற்போது ஹார்ப்பர் அரசு சொல்வதைப் போல் ஒரு சிலரை மட்டும் இந்தத் திட்டங்களின் கீழ் கவனிக்காமல் அவர்களுக்கு சுகாதார சேவைகள் மறுப்பதை ஒன்ரோறியோ மாகாணம் எந்த சூழ்நிலையிலும் ஏற்றுக் கொள்ளாது என்றும் அவர் மேலும் கூறினார்.
மாகாண முதல்வரின் விமர்சனங்களுக்குப் பின்னர் ஒன்றோரியோவின் நடவடிக்கையை “பொறுப்பற்ற கொள்கை என்று சாடி மத்திய குடியுரிமை மற்றும் குடிவரவுததுறை அமைச்சர் கிறிஸ் அலெக்சாண்டர் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். ஒன்டாரியோவின் இந்த நடவடிக்கை பணத்தை விரயம் செய்வதோடு போலியான அகதிகள் இத்தகைய சேவைகளை அணுகத் தூண்டும் என்று கூறிய அலெக்சாண்டரின் வாதத்தை எதிர்த்து, சுகாதார அமைச்சர் டெப் மாத்யூஸ் விமர்சன அறிக்கை வெளியிட்டுள்ளதால் இரு தரப்புக்குமிடையே கார சார விவாதம் நடந்து வருகிறது.
அண்மையில் மத்திய அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட நிதிக்குறைப்பு நடவடிக்கைகள், கனடாவில் குடியேறியவர்கள் பலரை அடிப்படை மற்றும் அத்தியாவசிய சுகாதாரச் சேவைகளை மட்டும் பெற்று இதர பயன்களைப் பெற முடியாமல் செய்தது. ஆயினும் பாதுகாப்பான நாடுகளில் இருந்து தஞ்சம் புகுபவர்கள் மற்றும் தஞ்சம் புக அனுமதி மறுக்கப்பட்டவர்களுகு இந்த சேவையின் பயன்கள் கிடைக்காது. அவர்கள் பொது சுகாதாரத்திற்கு அச்சுறுத்தலாக இருந்தால் மட்டுமே அரசாங்கம் அதைப் பரிசீலிக்கும் என விதிமுறைகள் கொண்டு வரப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்