பக்கங்கள்

பக்கங்கள்

18 ஜன., 2014


வலி.கிழக்கு பிரதேச சபையின் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் 7 பேரின் கட்சி உறுப்புரிமை ரத்து
யாழ்ப்பாணம் வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களில் 7 பேரின் கட்சி உறுப்புரிமை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.இவர்கள் கடந்த இரண்டு தடவைகளாக பிரதேச சபையினால் முன்வைக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தை தோற்கடிக்கும் வகையில் எதிராக வாக்களித்திருந்தனர்.
இதனையடுத்தே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக வடமாகாண சபை உறுப்பினர் எம் கே சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் எதிர்வரும் காலத்தில் இவர்கள் தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என்று சிவாஜிலிங்கம் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கீழ் உள்ள இந்த பிரதேசசபையின் வரவு செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக 9 பேர் வாக்களித்த நிலையில் 12 பேர் எதிராக வாக்களி;த்திருந்தனர்.
இவர்களில் 5 ஈபிடிபி உறுப்பினர்களுடன் 7 தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களும் இணைந்திருந்தனர்.