பக்கங்கள்

பக்கங்கள்

29 ஜன., 2014

மத்திய அமைச்சர் குமாரி செல்ஜா ராஜினாமா
காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு சமூக நீதி மற்றும் அதிகாரங்கள் துறை அமைச்சராக நியமிக்கப்பட்ட குமாரி செல்ஜா  தனது பதவியை ராஜினாமா செய்தார்.


பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில், தனது பதவி விலகல் குறித்த முடிவை தெரிவித்த 51 வயதான செல்ஜா கட்சிப் பணிக்கு திரும்ப உள்ளதாக கூறினார். தனது சொந்த மாநிலமான அரியானாவிலிருந்து மாநிலங்களைவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதை தொடர்ந்தே அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
முன்னதாக அக்கட்சி சார்பில் அம்மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்த புல்சாந்த் முலானாவிற்கு பதிலாக மாற்று தலைவரை தேடி வந்தது குறிப்பிடத்தக்கது. தலித் சமுதாயத்தை சேர்ந்த செல்ஜா மத்திய அரசிலில் பெரும் பங்காற்றியதாக தெரிவித்தார்.