வடமாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் சதுரங்க போட்டியை நடைமுறைப்படுத்தும் நோக்கில் இன்று யாழ் வலயத்தில் உத்தியோக பூர்வமாக சதுரங்கப் போட்டி நிகழ்வு ஆரம்பித்து
வைக்கப்பட்டது.
இந் நிகழ்வு இன்று காலை 11.30 மணியளவில் யாழ் இந்துக் கல்லூரி குமாராசாமி மண்டபத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்விற்கு வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றுகையில்,
இந்த சதுரங்க போட்டியில் வடமாகாணத்திலுள்ள ஐந்து மாவட்டங்களிலும் இருந்தும் இரண்டாயிரத்துக்கும் அதிகமானவர்கள் இணைந்துள்ளமை பெருமைக்குரிய விடயமாகும்.
சதுரங்க விளையாட்டு நற்சிந்தனையாற்றலை விருத்தி செய்வதுடன் கற்றலை தூண்டும் ஒரு அடித்தளமாகவும் இது அமையும்.மேலும் இந்த சதுரங்க விளையாட்டில் ரஷ்ய நாட்டவர்கள் முன்னிலை வகிப்பதுடன் அடுத்து இந்தியர்கள் இரண்டாம் நிலை வகிக்கின்றனர். எனவே சதுரங்க விளையாட்டை அடிப்படை விதிமுறைகளை கொண்டு கற்று இலங்கையைஏனைய நாடுகள் போற்றும் விதத்தில் சதுரங்கத்தில் பிரசித்தி பெற்று விளங்கும் என நம்புகிறேன். என அவர் தெரிவித்தார்.
மேலும் இந் நிகழ்விற்கு ஆளுநரின் செயலாளர் இளங்கோவன் ,கல்விப் பணிப்பாளர்கள் மறறும் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர். |