பக்கங்கள்

பக்கங்கள்

21 ஜன., 2014

யாழ்ப்பாணம் - இந்தியாவிற்கும் இடையில் நேரடி விமான சேவை
யாழ்ப்பாணத்திற்கும் இந்தியாவிற்கும் இடையில் நேரடி விமான சேவை ஆரம்பிக்கப்பட உள்ளது.யாழ்ப்பாணத்திற்கும் இந்தியாவிற்கும் இடையில் நேரடி விமான சேவைகளை ஆரம்பிப்பது குறித்து ஆராயப்பட்டு வருவதாக இந்திய கொன்சோல் அதிகாரி வீ.மஹாலிங்கம் தெரிவித்துள்ளார்.
இதற்கு மேலதிகமாக தலைமன்னாருக்கும் இராமேஸ்வரத்திற்கும் இடையில் கப்பல் சேவையொன்றையும் விரைவில் ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த இரண்டு விடயங்களும் வடக்கின் பொருளாதாரத்தை மேம்படுத்தும்.
இந்திய நிறுவனங்கள் இலங்கையில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற வர்த்தக சந்தைக் கண்காட்சியொன்றில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.