பக்கங்கள்

பக்கங்கள்

24 ஜன., 2014

கட்சி கட்டுப்பாட்டைக் காக்கவே மு.க.அழகிரி தற்காலிகமாக நீக்கம்: க.அன்பழகன் பேட்டி
மு.க.அழகிரி திமுக உறுப்பினர் பொறுப்பு உட்பட கழகத்தின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் தற்கா-கமாக நீக்கி வைக்கப்படுகிறார் என்று திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய க.அன்பழகன், கட்சி கட்டுப்பாட்டைக் காக்கவே திமுகவில் இருந்து மு.க.அழகிரி தற்காலிகமாக நீக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். கட்சி கட்டுப்பாட்டை காப்பாற்ற, யாரும் குறைக்காமல் தடுக்க, முறைப்படுத்த தலைமை கழகத்தினுடைய எண்ணமாக இந்த அறிக்கை வெளிவருகிறது என்றார்.