பக்கங்கள்

பக்கங்கள்

12 ஜன., 2014

எமிரேட் விமானத்தை சேதப்படுத்திய இரு மயில்கள்
இலங்கை தெற்கு மத்தல சர்வதேச விமான நிலையத்தில் “பிளைய்டுபாய்” என்ற டுபாய் விமானமொன்றை மயில்கள் சேதப்படுத்தியுள்ளன.இதனையடுத்து விமானம் தற்காலிகமாக தரையிறக்கப்பட்டதாக தெரிவிக்கின்றது.
பயணிகளுடன் புறப்பட்ட டுபாய் எயார்லைன்ஸ் விமானத்தின் இயந்திரத்தை ஆகக்குறைந்து இரண்டு மயில்கள் சேதப்படுத்திவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
விமானம் உடனடியாக தரையிறக்கப்பட்டு பயணிகள் ஹோட்டல்களுக்கு மாற்றப்பட்டு மாற்று நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தன.
இதேவேளை, மத்தல சர்வதேச விமான நிலையத்தில் பறவைகள் விமானத்தை சேதப்படுத்தும் சம்பவங்கள் முன்னரும் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.