பக்கங்கள்

பக்கங்கள்

28 ஜன., 2014


தேனி, கம்பத்தில் அழகிரி உருவபடம் எரிப்பு
தேனி மாவட்டத்தில் அழகிரி ஆதரவாளர்களே பெரும்பாண்மையாக இருந்து வந்தனர். ஆனால்,  கடந்த ஒரு வருடமாகவே அழகிரி ஆதரவாளர்கள் பெரும்பாலானோர், ஸ்டாலின் ஆதரவாளர்களாக
மாறிவிட்டனர்.
இந்த நிலையில் ஸ்டாலினை தரக்குறைவாகவும், கலைஞரின் மனதை புண்படும்படியும் பேசிய மு.க.அழகிரியி பேச்சு தெரியவந்ததால், கட்சியினர் கொந்தளித்தனர்.
இதையடுத்து அழகிரியை கண்டித்து, அவரது உருவபடத்தை தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மாவட்ட இளைஞரணியினர் எரித்தனர். இதே போல் கம்பத்தில் அழகிரியின் உருவபடத்தை எரித்தனர்.