பக்கங்கள்

பக்கங்கள்

26 ஜன., 2014

இளம் பெண் மீது மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்து கொலை: தீயுடன் கட்டிப்பிடித்ததால் காதலனும் சாவு

சென்னை வண்ணாரப்பேட்டையில் இளம்பெண் மீது மண்ணெண்ணெயை ஊற்றி காதலன் தீ வைத்து கொலை செய்தார். இதில் அந்த பெண் தீயுடன் காதலனை கட்டிப்பிடித்தால் அவரும் இறந்தார்.

புது வண்ணாரப்பேட்டை அம்மணியம்மன் தோட்டம் 3வது தெருவைச் சேர்ந்தவர் பிரகாஷ். இவர் மனைவி தங்கம் என்ற மலர் (33). இத் தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளன. ரௌடியான பிரகாஷ் சில மாதங்களுக்கு முன்பு அரசு மருத்துவமனையில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்நிலையில் தங்கத்துக்கும் பக்கத்து வீட்டில் வசிக்கும் பெயிண்டர் ராஜாவுக்கும் (30) இடையே தவறான உறவு இருந்ததாம்.
இந்நிலையில் ராஜாவுக்கும், தங்கத்துக்கும் கருத்து வேறுப்பட்டதாம். அதே வேளையில் தங்கத்துக்கும் சேர்ந்த இன்னொரு நபருக்கும் தவறான உறவு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் ராஜாவுக்கும், தங்கத்துக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாம். இதற்கிடையே தங்கத்துக்கும், ராஜாவுக்கும் வெள்ளிக்கிழமை இரவு கடுமையான தகராறு ஏற்பட்டது. இந்த தகராறில் ராஜா, அங்கிருந்த மண்ணெண்ணெயை தங்கத்தின் மீது ஊற்றி தீ வைத்ததாக தெரிகிறது.
இதில் தீயுடன் போராடிய தங்கம், தப்பியோட முயன்ற ராஜாவை கட்டிப்பிடித்துக் கொண்டாராம். இச் சம்பவத்தில் பலத்த காயமடைந்த இருவரையும் அப் பகுதி மக்கள் மீட்டு, அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்ற தங்கம், ராஜாதான் தன் மீது மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்ததாக வாக்குமூலம் அளித்தார். வாக்குமூலம் அளித்த சிறிது நேரத்தில் தங்கம் இறந்தார். இதேபோல ராஜா சனிக்கிழமை அதிகாலை இறந்தார்.இது குறித்து வண்ணாரப்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.