பக்கங்கள்

பக்கங்கள்

9 ஜன., 2014

சபைக்கு வந்தது செங்கோல்
வடமாகாண சபையின் இன்றைய அமர்வில் முதன்முறையாக செங்கோல் எடுத்து வரப்பட்டது.அதன்படி இன்று காலை 9மணிக்கு ஆரம்பமாகிய சபை நடவடிக்கையின் போது அவைத்தலைவர்
செங்கோலுடன் அழைத்து வரப்பட்டார்.

எனினும் இதற்குமுன்னைய அமர்வுகளில் செங்கோல் இன்றியே சபை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

எனினும் புதிய செங்கோலினை முதலமைச்சர், அவைத்தலைவர் மற்றும் அமைச்சர்கள் சிலர் இணைந்து வடிவமைத்துக் கொடுத்துள்ளனர்.

மேலும் இன்றைய அமர்வின் போது செங்கோல் எடுத்து வரப்படும் என கடந்த சபை அமர்வில் அவைத்தலைவரால் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.