பக்கங்கள்

பக்கங்கள்

8 ஜன., 2014

பிரித்தானிய ஆசிரியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு பொருட்களும் கொள்ளை
பிரித்தானியாவைச் சேர்ந்த ஆசிரியை ஒருவர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் அவரின் வீட்டில் இருந்த பொருட்களும் கொள்ளையிடப்பட்டுள்ளன. இந்தச் சம்பவம் காலியில் இடம்பெற்றுள்ளது. காலியில் உள்ள சர்வதேச பாடசாலை ஒன்றில் ஆசிரியையாக கடமையாற்றும் 34 வயதான இந்தப் பெண், இரண்டு நண்பர்களுடன் வாடகை வீடு ஒன்றில் தங்கியிருந்தார்.
கடந்த 2 ம் திகதியன்று இரண்டு நண்பர்களும் கதிர்காமம் சென்ற நிலையில் ஆசிரியை தனித்திருந்த போதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வீட்டின் ஜன்னலை உடைத்த கொள்ளையர் கத்திமுனையில் ஆசிரியையை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதுடன், சுமார் 95 ஆயிரம் ரூபா பெறுமதியான பொருட்களையும் கொள்ளையிட்டு சென்றுள்ளார்.
எனினும் சந்தேகநபர் இன்னும் கைதுசெய்யப்படவில்லை.