பக்கங்கள்

பக்கங்கள்

9 ஜன., 2014

அமெரிக்க விசேட தூதுவரை சந்­தித்­த­ ஊடகவியலாளர்­க­ளுக்கு படைப் புல­னாய்­வா­ளர்கள்மிரட்டல் 
வடக்­கிற்கு நேற்று விஜயம் செய்த போர்க்­குற்ற விசா­ர­ணை­க­ளுக்­கான அமெ­ரிக்­காவின் விசேட தூதுவர் ஸ்டீபன் ஜே. ராப்பி­னு­டைய சந்­திப்­புக்­களை அவ­தா­னித்த புல­னாய்­வா­ளர்கள் அச்­சந்­திப்­புக்­களில் செய்தி சேக­ரிக்கச் சென்ற ஊட­க­வி­ய­லா­ளர்­களின் புகைப்­படக் கரு­வி­களைத் தரு­மாறும் அங்கு எடுக்­கப்­பட்ட படங்­களை அழிக்­கு­மாறும் வற்­பு­றுத்­தி­யுள்­ளனர்.
இதே­வேளை யாழில் கிறீன் கிறாஸ் விடு­தியில் சிவில் சமூகப் பிர­தி­நி­தி­க­ளுடன் நடை­பெற்ற சந்­திப்­புக்­களை அவ­தா­னித்த புல­னாய்­வா­ளர்கள் தொடர்­பாக அங்கு செய்தி சேக­ரித்த ஊட­க­வி­ய­லாளர்கள் போர்க்­குற்ற விசா­ர­ணை­க­ளுக்­கான அமெ­ரிக்­காவின் விசேட தூதுவர் ஸ்டீபன் ராப்பின் கவ­னத்­திற்குக் கொண்­டு­வந்த பொழுது அப்­பு­ல­னாய்­வா­ளர்கள் தொடர்­பாக அவ­தா­ன­மாக இருக்­கு­மாறு தூதுவர் ராப்பும் அறி­வு­றுத்­தி­யுள்­ளமை அங்கு கூடி­யி­ருந்­த­வர்கள் மத்­தியில் வியப்பைத் தோற்­று­வித்­துள்­ளது.
இவ்­வி­டயம் தொடர்­பாக மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது:
நேற்று யாழ்ப்­பா­ணத்­துக்கு விஜயம் செய்த தூதுவர் ஸ்டீபன் ராப் பிற்­பகல் யாழ். கிறின் கிறாஸ் விருந்­தினர் விடு­தியில் சிவில் சமூகப் பிர­தி­நி­தி­க­ளுடன் சந்­திப்­பொன்றை ஏற்­பாடு செய்­தி­ருந்தார்.
இச்­சந்­திப்­புக்­களின் பொழுது செய்தி சேக­ரிக்கச் சென்ற ஊட­க­வி­ய­லா­ளர்­களை அங்கு படம் எடுக்க வேண்டாம் என புல­னாய்­வா­ளர்கள் அச்­சு­றுத்­தி­யுள்­ளனர்.
அதனை மீறி சந்­திப்­புக்­களைப் படம் எடுத்­த­வர்­களின் புகைப்­படக் கரு­வி­களைத் தரு­மாறு புல­னாய்­வா­ளர்கள் அச்­சு­றுத்­தி­யுள்­ளனர்.
இதனை தூதுவர் ஸ்டீபன் ராப்பின் கவ­னத்­திற்கு ஊட­க­வி­ய­லா­ளர்கள் தெரி­யப்­ப­டுத்­திய பொழுது இங்கு இச்­சந்­திப்­புக்­களை மேற்­கொண்­ட­வர்­க­ளி­டமும் புல­னாய்­வா­ளர்கள் விசாரணை நட த்துவார்கள் எனவும் அவர்களுக்கு என்ன நடக்கும் என்பது தனக்குத் தெரியும் எனவும் சிரித்த முகத்துடன் பதிலளித்ததாக அப்பகுதியில் செய்தி சேகரித்த ஊடகவியலாளர்கள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.