பக்கங்கள்

பக்கங்கள்

10 ஜன., 2014

அமெரிக்க விசேட தூதுவர் உதயனுக்கு விஷயம் 
சர்வதேச போர்க்குற்ற விவகாரங்களைக் கையாளும் அமெரிக்காவின் விசேட தூதுவர் ஸ்டீபன் ஜே.ரெப், இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் மிச்செல் ஜே. சிசன் ஆகியோர் 'சுடர் ஒளி'யின் சகோதரப் பத்திரிகையான 'உதயன்' அலுவலகத்திற்கு புதன்கிழமை (08.01.2014) சென்றனர். அங்கு 'உதயன்' - 'சுடர் ஒளி' பத்திரிகைகளின் முகாமைத்துவப் பணிப்பாளரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஈ.சரவணபவன், 'உதயன்' பத்திரிகையின் பிரதம ஆசிரியர் ம.வ.கானமயில்நாதன் ஆகியோரைச் சந்தித்துக் கலந்துரையாடினர். இந்தச் சந்திப்பின்போது கடந்த காலங்களில் ஆயுதாரிகளின் திட்டமிட்ட தாக்குதல்களில் கொல்லப்பட்ட 'உதயன்' - 'சுடர் ஒளி' பத்திரிகைகளின் ஊடகவியலாளர்கள், ஊழியர்கள் ஆகியோர்களின் விவரங்களைத் திரட்டினார் சர்வதேச போர்க்குற்ற விவகாரங்களைக் கையாளும் அமெரிக்காவின் விசேட தூதுவர் ஸ்டீபன் ஜே.ரெப்..........