பக்கங்கள்

பக்கங்கள்

28 ஜன., 2014

அனலைதீவு மற்றும் புலம்பெயர் அனலைதீவு மக்களே. 
உங்கள் அனைவரினதும் வேண்டுகோளுக்கு இணங்க ஊரின் அத்தியாவசிய புனரமைப்பு வேலைத்திட்டங்களில் மிகவும் அளப்பெரிய மற்றும் அதிக செலவைகொண்ட வேலைத்திட்டமான அனலைதீவு பொது வைத்தியசாலை
வேலைத்திட்டத்தை அனலைதீவு கலாச்சார ஒன்றியம் முக்கிய வேலைத்திட்டமாக எடுத்து ஆரம்பித்தது. முக்கியமாக புலம் பெயர் வாழ் அனலைதீவு மக்களை நம்பியே இந்த வேலைத்திட்டத்தை நாங்கள் ஆரம்பித்துள்ளோம். அந்த வேலைத்திட்டமானது மிகவும் வெற்றிகரமாகவும், சட்ட திட்டங்களுக்கு அமைவாகவும்ஆரம்பிக்கப்பட்டு நடந்து வருகிறது. அந்த வேலைதிட்டத்தின் படங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. அனலைதீவு மக்களே நாம் அனைவரும் ஒன்றாக ஒற்றுமையாக இணைந்து இந்த வேலைத்திட்டத்தை வெற்றிகரமாக முடிக்க வேண்டும்

எனவே தயவுசெய்து நீங்கள் ஏற்றுகொண்டபடி உங்கள் நன்கொடையை வழங்கி எங்களுக்கு ஒத்துழைப்பு தருமாறு அனலைதீவு கலாச்சார ஒன்றியம் – கனடா இத்தருணத்தில் கேட்டு கொள்கிறது. அத்துடன் இன்னும் இந்த வேலைத்திட்டத்தை பற்றி அறியாது இருப்பவருடன் நீங்கள் அதை எடுத்துச்சொல்லி அவர்களின் பங்கையும் இந்த வேலை திட்டத்துக்கு எடுத்து தருமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டு கொள்கின்றோம். மேலும் அவ்வப்போது புனரமைப்பு பணிகளின் படங்கள் கிடைக்கும் போது உங்கள் பார்வைக்கு இணைக்கப்படும் என்பதையும் அறியத்தருகின்றோம்.

ஒன்றாய் உழைப்போம், ஊரின் மகிமையை உயர்த்துவோம்…

நன்றிகளுடன்,
அனலைதீவு கலாச்சார ஒன்றியம் – கனடா