பக்கங்கள்

பக்கங்கள்

6 ஜன., 2014

முன்னாள் அமைச்சர் துரைராஜ்  மரணம்: ஜெயலலிதா இரங்கல்
அ.தி.மு.க, பொதுச்செயலாளரும், முதல் அமைச்சருமான ஜெயலலிதா வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மதுரை புறநகர் மாவட்ட அ.தி.மு.க, அவைத்தலைவர்
சி.துரைராஜ் உடல் நலக்குறைவால் மரணமடைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன். கட்சியின் மீதும், கட்சி தலைமையின் மீதும் மிகுந்த விசுவாசம் கொண்டு பணியாற்றி வந்த ஆரம்ப கால கட்சி தொண்டரான துரைராஜ், சேடப்பட்டி தொகுதி மாணவர் அணி அமைப்பாளர், சேடப்பட்டி ஒன்றிய செயலாளர், மதுரை புறநகர் மாவட்ட செயலாளர் முதலான பொறுப்புகளில் பணியாற்றி உள்ளார்.

அதேபோல், ஊராட்சி ஒன்றியக்குழு தலைவராகவும், 2001-2006 மற்றும் 2006-2011 ஆகிய இரண்டு முறை சேடப்பட்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினராகவும் பணியாற்றி உள்ளார். மேலும், அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் அமைதி பெற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

இவ்வாறு அந்த இரங்கல் அறிக்கையில் ஜெயலலிதா கூறி உள்ளார்.