பக்கங்கள்

பக்கங்கள்

26 ஜன., 2014

ஒன்றாரியோ பிரதமர் விடுதலைப்புலிகளின் முன்னணி அமைப்பு முக்கியஸ்தரை சந்தித்தார்.
கனடா ஒன்றாரியோ மாநில லிபரல் கட்சியின் பிரதமர் கத்லீன் வென்னே அண்மையில் விடுதலைப் புலிகளின் முன்னணி அமைப்பு பேச்சாளருடன் சந்திப்பு ஒன்றை நடத்தியுள்ளார். கனேடிய செய்தித்தாள் ஒன்று இதனை தெரிவித்துள்ளது.
உலக தமிழர் இயக்கத்தின் முன்னாள் பேச்சாளர் நேரு குணரட்னத்துடன் தாம் சந்திப்பு நடத்தியமையை ஒன்றாரியோ பிரதமரும் உறுதிப்படுத்தியுள்ளார்.
கடந்த 14 ம் திகதியன்று தைப்பொங்கல் அன்று டொரன்டோவின் கந்தசாமி கோயிலுக்கு சென்றிருந்த போதே இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது.
உலக தமிழர் இயக்கம் கனடாவில் பயங்கரவாத பட்டியலில் சேர்க்கப்பட்டு தடை செய்யப்பட்டுள்ள இயக்கமாக உள்ளது.
இது தொடர்பில் கருத்துரைத்துள்ள ஒன்றாரியோ பிரதமரின் பேச்சாளர் பிரதமர் இந்த நிகழ்வின் போது பலரையும் சந்தித்து உரையாடியதாக தெரிவித்துள்ளார்.