பக்கங்கள்

பக்கங்கள்

27 ஜன., 2014

விமானத்தில் பறந்து வந்து சென்னையில் விபச்சாரம் 
சென்னையில் தியாகராயநகர், சேப்பாக்கம், மவுலிவாக்கம் ஆகிய இடங்களில் பிரபல அடுக்குமாடி குடியிருப்புகளில் விபசாரம் நடப்பதாக, விபசார தடுப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 


இதன் பேரில் விபசார தடுப்பு உதவி கமிஷனர் கணபதி, இன்ஸ்பெக்டர் கோபிநாத் ஆகியோர் தலைமையில், மேற்குறிப்பிட்ட இடங்களில் சில அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளிலும், பங்களாக்களிலும் அதிரடி சோதனை வேட்டை நடந்தது.


இந்த சோதனை வேட்டையில் மும்பை, கொல்கத்தா, பெங்களூரு போன்ற நகரங்களில் இருந்து விமானம் மூலம் வரவழைக்கப்பட்டு, விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட 5 இளம்பெண்கள் மீட்கப்பட்டனர். இந்த இளம்பெண்கள், விமானத்தில் பறந்து வந்து, விபசாரத்தில் ஈடுபட்டு விட்டு, கைநிறைய பணத்தை வாங்கிக் கொண்டு மீண்டும் விமானத்தில் பறந்து சென்று விடுவார்கள், என்பது குறிப்பிடத்தக்கது.
போலீசார் நடத்திய இந்த வேட்டையில், கேரளாவைச் சேர்ந்த புரோக்கர்கள் நசீர்(வயது 34), ரபீக்(23), கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த யமனப்பா(32), ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பிரகாஷ், மிசோரத்தைச் சேர்ந்த வன்லல்நாகா ஆகிய 6 புரோக்கர்கள் கைது செய்யப்பட்டனர்.