பக்கங்கள்

பக்கங்கள்

6 ஜன., 2014

நடிகை ஸ்ருதி ஹாசன் ஆஸ்பத்திரியில் அனுமதி
 நடிகர் கமல்ஹாசனின் மகளும் நடிகையுமான ஸ்ருதி ஹாசன்,  தெலுங்கில் ரேஸ் குர்ரம் என்ற படத்தில் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பில் பங்கேற்க ஐதராபாத் சென்றிருந்தார். அங்கு நேற்று ஸ்ருதி நடிக்கும்  மற்றொரு படமான எவடுவின் புரமோஷன்
நிகழ்ச்சி நடந்தது. இதில் ஸ்ருதி ஹாசன் கலந்துகொண்டார். அப்போது அவருக்கு திடீரென வயிற்று வலி  ஏற்பட்டது. அதை சகித்துக்கொண்டு அவர் நிகழ்ச்சியில் பங்கேற்றதாக தெரிகிறது.


வயிற்று வலி அதிகமானதால் நிகழ்ச்சி முடிந்ததும் ஜூப்ளி ஹில்ஸ்  பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு அவர் சென்றார். உடனே அவர் வார்டில் சேர்க்கப்பட்டார். ஸ்கேன் எடுக்கப்பட்டது. தொடர்ந்து அவருக்கு சிகிச்சை  அளிக்கப்படுகிறது.


இது பற்றி ஸ்ருதிக்கு நெருங்கியவர்கள் கூறும்போது, தொடர்ந்து ஷூட்டிங்கில் பங்கேற்றதால் ஸ்ருதி சோர்வாக இருந்து வந்தார்.  அவருக்கு ஃபுட் பாய்சன் பிரச்னை ஏற்பட்டிருக்கும் என தெரிகிறது என்றனர்.