பக்கங்கள்

பக்கங்கள்

28 ஜன., 2014


தேமுதிகதான் இனி முடிவு செய்ய வேண்டும்! கலைஞர் பேட்டி!
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் கலைஞர் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களை சந்தித்தார்.


செய்தியாளர் :- காங்கிரஸ் கட்சி உங்களிடம் கூட்டணி வைக்க முன் வந்தால் உங்கள் கருத்து என்ன?
கலைஞர் :- காங்கிரஸ் கட்சி எங்களைத் தேடி வருவதாக நான் ஜம்பம் அடித்துக் கொள்ள விரும்பவில்லை. ஒருவரையொருவர் அரவணைத்து அணிசேருவது அந்தந்த கட்சிகளுடைய சுயமரியாதையை விட்டுக் கொடுக்காமல் நடைபெற வேண்டிய விஷயங்களாகும்.
செய்தியாளர்:- தே.மு.தி.க.வோடு தி.மு.க. கூட்டணி சேருவது பற்றி?
கலைஞர் :- நாங்கள் முதலிலே அதைப் பற்றிச் சொல்லி விட்டோம். அதற்கு மேல் தொடர வேண்டியவர்கள் அவர்களே தவிர நாங்கள் அல்ல. இவ்வாறு பதில் அளித்தார்.