பக்கங்கள்

பக்கங்கள்

29 ஜன., 2014

அழகிரியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தை அவரது மகனும், சினிமா தயாரிப்பாளருமான துரை தயாநிதி இன்றே துவங்கிவிட்டார்.
திமுகவிலிருந்து அழகிரி தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில் தனது தந்தைக்கு ஆதரவாக துரை தயாநிதி ட்விட்டரில் கருத்துகள் தெரிவித்து வருகிறார்.இந்த பிரச்னைகளுக்கிடையே தனது பிறந்தநாள் விழாவை தனது பலத்தை காட்டும் விழாவாக கொண்டாட ஏற்பாடு செய்து வருகிறார் அழகிரி.
இந்நிலையில் அழகிரியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தை அவரது மகன் துரை தயாநிதி இன்றே துவங்கிவிட்டார். மதுரை அருகே இருக்கும் முத்துப்பட்டியில் இன்று இலவச மருத்துவ முகாம் ஒன்றை நடத்தினார். பின்னர் பசுமலையில் உள்ள இன்ப இல்லம் என்னும் முதியோர் இல்லத்திற்கு மாருதி ஓம்னி வேன் ஒன்றை நன்கொடையாக வழங்கினார். மேலும் பிறந்த நாளை சிறப்பாக சிறப்பாக கொண்டாட பரபரப்பாக செயல்பட்டு வருகிறார்.