பக்கங்கள்

பக்கங்கள்

23 ஜன., 2014

மாநிலங்களவைத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளராக டி.கே.ரங்கராஜன் போட்டியிடுவார் என்று அக்கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.
சென்னையில் வியாழக்கிழமை செய்தியாளர்கள் சந்திப்பில் ஜி.ராமகிருஷ்ணன் இதனை அறிவித்தார். 


மேலும் மாநிலங்களவைத் தேர்தலில் ஆதரவு அளிப்பதாக கூறிய அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா மற்றும் அதிமுக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கும் தங்களது நன்றிகளை தெரிவித்துக்கொக்கிறோம். அதிமுகவுடனான கூட்டணி பாராளுமன்றத் தேர்தலிலும் தொடர விரும்புவதாகவும் தெரிவித்தார்.