பக்கங்கள்

பக்கங்கள்

23 ஜன., 2014

இலங்கைத் தமிழ் இளைஞருக்கு சார்ஜாவில் மரணதண்டனை!

ஐக்கிய அரபு இராச்சியத்தில் இலங்கையர் ஒருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு இராச்சியத்தைச் சேர்ந்த நபர் ஒருவரை கொலை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டு,
19 வயதுடைய ரவீந்திரன் கிருஸ்ணபிள்ளை என்பவருக்கே நேற்றுக்காலை மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு இராச்சியப் பிரஜையுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து குறித்த பிரஜையை வாகனத்தில் மோதிக் கொன்றதாக இலங்கையர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
துப்பாக்கியினால் சுட்டு குறித்த நபருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.நட்டஈடு வழங்கி தண்டனையைக் குறைத்துக் கொள்ள ரவீந்திரனின் குடும்பத்தினர் முயற்சித்த போதிலும், கொலையுண்டவரின் குடும்பத்தினர் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை என தெரிவிக்கப்படுகிறது.