பக்கங்கள்

பக்கங்கள்

31 ஜன., 2014

திமுகவில் நடப்பது நாடகமா? உண்மையா? :கலைஞர் பேட்டி
மு.க.அழகிரி இன்று மதுரையில் அளித்த பேட்டியில்,  ‘’கலைக்கப்பட்ட மதுரை மாநகர் திமுக நிர்வாகிகள் அனைவருக்கும் பொறுப்புகள் வழங்கப் பட வேண்டும்; அவர்களை சஸ்பெண்ட்
செய்ததை நீக்கம் செய்தால் மட்டுமே சமரசத்துக்கு உடன்படுவேன் என்றும் நிபந்தனை விதித்தார். அவர்கள் மீதான நடவடிக்கைகளை கைவிடவில்லை எனில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை’’ என்றார்.


 இந்நிலையில் திமுக தலைவர் கலைஞர் சென்னையில் மாலையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். 
அப்போது அவர்,  ’’திமுகவில் இருந்து நீக்கப்பட்ட 10 பேரின் நடவடிக்கையை பொறுத்துக்கொள்ள முடியாது.  10 பேரும் திமுக மாவட்ட செயலர்கள்  மீது போலீசில் புகார் அளித்தவர்கள்’’ என்று தெரிவித்தார்.
அவர் மேலும்,  ‘’   திமுகவில் நடப்பது நாடகமா? உண்மையா? என்பது பிரேமலதாவுக்கே தெரியும்’’ என்றும் தெரிவித்தார். 
பேட்டியில் அவர் மேலும்,  ’’தமிழக ஆளுநர் நிகழ்த்திய உரையில் விவாதிக்க ஒன்றுமில்லை’’ என்றும் தெரிவித்தார்..