பக்கங்கள்

பக்கங்கள்

16 ஜன., 2014

சென்னையில் நடிகர் சல்மான்கான் கொடும்பாவி எரிப்பு
குஜராத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் இந்தி நடிகர் சல்மான்கான் பங்கேற்றார். அப்போது அவர் நரேந்திர மோடி நல்லவர் என்றும் பிரதமர் ஆவதற்கு தகுதியானவர் என்றும் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி யளித்தார். 



இதற்கு இந்திய தேசிய லீக் கட்சி கடும் எதிர்ப்பை தெரிவித்தது. சல்மான் கானின் செயலை கண்டித்து சென்னை சேப்பாக்கத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில செயலாளர் ஷமா தலைமையில் மாநில அமைப்பு செயலாளர் ஐதர்அலி முன்னிலையில் நடந்த போராட்டத்தில் சல்மான்கான் கொடும்பாவி எரிக்கப்பட்டது. போலீசார் அவர்களை கைது செய்து பின்னர் விடுவித்தனர்.