பக்கங்கள்

பக்கங்கள்

10 ஜன., 2014

சிங்கப்பூரில் அஜீத்தின் ‘வீரம்’ காட்சி திடீர் ரத்து: ரசிகர்கள் போராட்டத்தால் பரபரப்பு
நடிகர் அஜீத்தின் ‘வீரம்’ திரைப்படம் வெளியானதையொட்டி தமிழகத்தில் உள்ள தியேட்டர்களில், ரசிகர்கள் அஜீத்தின் கட்-அவுட்டுகள், கொடி, தோரணம் அமைத்தும் பட்டாசு வெடித்தும் உற்சாகமாக கொண்டாடினார்கள். 


சிங்கப்பூரில் சமீபத்தில் பயங்கர கலவரம் நடந்த லிட்டில் இந்தியா பகுதியில் உள்ள ரெக்ஸ் திரையரங்கில் வியாழக்கிழமை இரவு இப்படத்தின் சிறப்புக் காட்சியைப் பார்ப்பதற்காக ஏராளமான ரசிகர்கள் டிக்கெட் வாங்கியிருந்தனர். ஆனால், அந்த காட்சி திடீரென ரத்து செய்யப்பட்டது. 
இதனால் ஆத்திரம் அடைந்த ரசிகர்கள் தியேட்டரை விட்டு வெளியேற மறுத்ததுடன் தியேட்டர் நிர்வாகத்தை கண்டித்து கோஷமிட்டனர். இதையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
டிக்கெட் வாங்கிய ரசிகர்களோ பணத்தை திரும்ப பெற மறுத்ததுடன், அந்த இடத்தைவிட்டும் வெளியேறவில்லை. 2 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு, இன்று அந்த படத்தைப் பார்ப்பதற்கு தியேட்டர் நிர்வாகம் அனுமதி அளித்தது. அதன்பின்னர் ரசிகர்கள் சமாதானம் அடைந்தனர்.
குறித்த நேரத்திற்குள் வீரம் படத்தை பதிவிறக்கம் செய்ய முடியாததால் திரையிட முடியவில்லை என்று தியேட்டர் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.