பக்கங்கள்

பக்கங்கள்

18 ஜன., 2014

ஜெனீவா செல்லும் பிரதிநிதிகள் குழு தொடர்பில் சர்ச்சை
ஜெனீவா செல்லும் பிரதிநிதிகள் குழு தொடர்பில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை மாநாட்டில் பங்கேற்கும் பிரதிநிதிகள் குழு தொடர்பில் சர்ச்சை நிலைமை ஏற்பட்டுள்ளது.
இரண்டு அமைச்சர்களுக்கு இடையில் ஏற்பட்டுள்ள முரண்பாட்டு நிலைமையே இதற்கான காரணமாகும்.
வெளிவிவகாரத்துறை தொடர்பிலான இரண்டு அமைச்சர்களுக்கு இடையில் முரண்பாட்டு நிலைமை ஏற்பட்டுள்ளது.
தங்களது பிரதிநிதிகளை இந்த பிரதிநிதிகள் குழுவில் இணைத்துக் கொள்ள இரண்டு அமைச்சர்களும் முயற்சித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் இந்த இரண்டு அமைச்சர்களையும் அனுப்பி வைப்பதா அல்லது ஒருவரை அனுப்பி வைப்பதா என்பதனை ஜனாதிபதி இன்னமும் தீர்மானிக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.