பக்கங்கள்

பக்கங்கள்

29 ஜன., 2014

போர்க்குற்ற விசாரணையை ஆரம்பித்தால் இலங்கைக்கு உதவ தயார்!- பிரித்தானியா
தம்மீது சுமத்தப்பட்டுள்ள போர்க்குற்றம் தொடர்பில் உள்நாட்டு விசாரணைகளை இலங்கை அரசாங்கம் ஆரம்பித்தால் அதற்கு தாம் ஆதரவளிக்க தயாராக இருப்பதாக பிரித்தானியா அறிவித்துள்ளது.
பிரி;த்தானிய நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய வெளியுறவு மற்றும் பொதுநலவாய அலுவலக அமைச்சர் ஹிகோ ஸ்வைரி இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.
சர்வதேசம் ஏற்றுக்கொள்ளும் வகையில் இந்த விசாரணைகள் அமையவேண்டும்.
வெறுமனே திருப்திப்படுத்தும் வகையில் இந்த விசாரணைகள் மேற்கொள்ளப்படுமானால் அதனை பிரித்தானியா ஏற்றுக்கொள்ளாது என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.