பக்கங்கள்

பக்கங்கள்

15 ஜன., 2014

இலங்கையின் பந்துவீச்சில் சுருண்டது பாகிஸ்தான்
பாகிஸ்தான் அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கையின் ஆதிக்கம் மேலேhங்கியுள்ளது.
 

 
டுபாயில் நடைபெறும் இந்தப் போட்டியில் தனது முதல் இன்னிங்ஸ்சில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் இலங்கை அணயின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறி அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 165 ஒட்டங்கள் மாத்திரமே பெற்றிருந்தது.

 
பாகிஸ்தான் அணிசார்பாக அதிகபட்சமாக குராம் மன்சூர் 73 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தார்.

 
நுவன் பிரதீப் மற்றும் ரங்கன ஹேரத் ஆகியோர் மூன்று விக்கெட்டுக்களைக் கைப்பற்றியதுடன் சுரங்க லக்மால் மற்றும் சமிந்த ஏரங்க ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களைக் வீழ்த்தினர்.

 
இதனயைடுத்து தனது முதலாவது இனிங்சிற்காக துடுப்பெடுத்தாடி வரும் இலங்கை நேற்றை முதல்நாள் ஆட்ட நேர முடிவின் போது ஒரு விக்கெட் இழப்பிற்கு 57 ஓட்டங்களை பெற்றிருந்ததும் குறிப்பிடத்தக்கது.