பக்கங்கள்

பக்கங்கள்

27 ஜன., 2014

  • பாஜக அலுவலகத்தில் வைகோ ( படங்கள் )nakeeran
 

பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுடன் ம.தி.மு.க. கூட்டணி அமைத்துள்ளது. இதையொட்டி பா.ஜனதா தலைவர்கள் ம.தி.மு.க. அலுவலகத்துக்கு சென்று வைகோவை சந்தித்து பேசினார்கள்.
அதைத்தொடர்ந்து ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ பா.ஜனதா தலைமை அலுவலகமான கமலாலயத்துக்கு இன்று சென்றார். அவருடன் துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா, மாசிலாமணி, தேவதாஸ், குமரி விஜயகுமார், செங்குட்டுவன் உள்ளிட்ட நிர்வாகிகளும் உடன் சென்றனர்.
அலுவலக வாசலில் பா.ஜனதா மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், வைகோவுக்கு சால்வை அணிவித்து வரவேற்றார். பின்னர் வைகோ, பா.ஜனதா நிர்வாகிகளுக்கு சால்வை அணிவித்தார்.
அதைத்தொடர்ந்து கூட்டணி மற்றும் நரேந்திரமோடி பங்கேற்கும் பொதுக்கூட்டம் தொடர்பாக இரு கட்சியினரும் ஆலோசனை நடத்தினார்கள். இதில் பா.ஜனதா சார்பில் இல.கணேசன், கே.என். லட்சுமணன், மோகன் ராஜுலு, டாக்டர் தமிழிசை சவுந்திரராஜன், வானதி சீனிவாசன் ஆகியோர் பங்கேற்றார்கள்.
அதன்பின்னர் பா.ஜனதா அகில இந்திய செயலாளர் முரளிதரராவ், பொன்.ராதாகிருஷ்ணன், வைகோ ஆகியோர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர்.