பக்கங்கள்

பக்கங்கள்

14 பிப்., 2014


லோக்சபா தேர்தலில் 15 தொகுதிகளில் பா.ம.க. வெற்றிபெறும்: குரு

வாழப்பாடி பேரூராட்சி காளியம்மன்நகர் மற்றும் முத்தம்பட்டியில் பா.ம.க., மற்றும் வன்னியர் சங்க கொடியேற்று விழா நடந்தது. அவ்விழாவிற்கு பா.ம.க., மாநில துணைப்பொது செயலாளர் சண்முகம் தலைமை வகித்தார். வாழப்பாடி ஒ
ன்றிய செயலாளர் பழனிசாமி வரவேற்றார்.


முத்தம்பட்டியில் கொடி யேற்றி வைத்த வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குரு பேசியபோது, ‘’வன்னியர் இன இளைஞர்களிடையே எழுச்சி ஏற்பட்டுள்ளது. சேலத்தில் இருந்து லோக்சபா தேர்தல் பிரச்சாரத்தை நான் தொடங்கியுள்ளேன். லோக் சபா தேர்தலில், 15 தொகுதிகளில் பா.ம.க., வெற்றி பெறும்’’ என்றார்.